Activities
எமது செயல்பாடுகள்!
1. எங்களைத் தொடர்பு கொள்ளும் அனைத்துப் பயனாளர்களும் எங்களது இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள எங்களது அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பிரிண்ட் எடுத்து நிரப்பி, கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள எங்களது அலுவலக முகவரிக்கு கொரியர் செய்தோ இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. ஆன்லைனில் பதிவு செய்யும் போது, உங்களது இ-மெயில் ஐடியைக் குறிப்பிடுவதோடு, எமது தளத்தில் நுழைவதற்காக உங்களுக்குப் பிடித்த Username ஐ உருவாக்கியும், ஒரு பிரத்யேக பாஸ்வேர்டை நீங்களே எண்கள், எழுத்துகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய குறைந்தது 8 இலக்க பாஸ்வேர்டாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
3. நீங்கள் Register செய்த பிறகு, நாங்கள் அனுப்புகின்ற Verification இ-மெயிலை உங்களது மெயில் பாக்ஸ்களில் (Primary & Promotions folders) செக் செய்து, எங்களது மெயிலை click செய்த உடன், நாங்கள் Approval செய்ய அதிகபட்சம் 24 மணி நேரம் ஆகும் என்பதை அன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
4. பதிவு முற்றிலும் இலவசம்! இலவசப் பதிவு செய்துள்ள அனைவரும் பொருத்தமான வரன்களை 9150504545 மொபைலில் தொடர்பு கொண்டு, இ-மெயிலில் இலவசமாகப் பெறலாம். திருமணம் வரை அனைவருக்கும் இலவசமாக offline assistance சேவையை வழங்குகிறோம்.
5. Unlimited வரன்களை ஆன்லைனில் நீங்களே பார்வையிட, எங்களது Silver, Gold & Diamond உறுப்பினர் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் தேவைப்பட்டால் இணைந்து கொள்ள வேண்டுகிறோம். நாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் மிகக் குறைவு என்பதை நீங்கள் மற்ற தளங்களின் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
6. மேலும், அல்லாஹ்வின் பெருங்கிருபையாலும், எம் பெருமானார் (ஸல்) அவர்களின் துஆப் பரக்கத்தாலும் திருமணம் இனிதே நடைபெறும் வரை இன்ஷா அல்லாஹ் அனைத்து விதமான பணிகளையும், உங்கள் மனம் விரும்பும் வகையில் அன்போடும் ஆதரவோடும் முழு ஒத்துழைப்போடும் ஆற்றிட தயாராக இருக்கிறோம் என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Download free registration form

We write rarely, but only the best content.