இத்தளத்தை மொபைலில் வசதியாகப் பார்வையிட Desktop Version ஐயும், Profile upload & update செய்ய Mobile Version ஐயும் பயன்படுத்தவும். learn more
Assisted service
விருப்ப சேவை
1.எங்களது வாடிக்கையாளர்களாகிய உங்களுக்காக, நாங்கள் களத்தில் நின்று, 100 சதவீத உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்து, நம்பகத் தன்மையோடு வரன் பேசி முடிக்கும் விருப்ப சேவையையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம்.
2.விருப்ப சேவை என்றால் என்ன? உங்களுக்கு ஒரு வரன் பிடித்து விட்டது. பிறகு, ‘அந்த வரனைப் பேசி முடிக்க வேண்டும். இடையில் எந்த ஒரு தொய்வும் இல்லாமல், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து, இன்ஷா அல்லாஹ் திருமணம் (நிக்காஹ்) நிச்சயிக்க வேண்டும்’, என்ற எண்ணம் எல்லா பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் மனதில் பிரகாசிக்கும். அந்த நேரத்தில் அந்தப் பணியைத் திறம்படச் செய்து முடிப்பதுதான் எங்களது விருப்ப சேவை (Assisted Service) என்கிற தனிப்பட்ட திட்டங்கள் ஆகும். இந்த வரன் பேசி முடிக்க தனிப்பட்ட திட்டங்களில் நீங்கள் விருப்பப்பட்டால், 30 சதவீதம் முன் பணம் செலுத்தி ரசீது பெற்று இணைந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் உங்கள் விருப்பம் போல் வரன் பேசி முடித்த பிறகு, மீதித் தொகையைப் பெற்றுக் கொள்கிறோம்.
3.இதனை நாங்கள் பல வகைகளாகப் பிரித்துள்ளோம். ஒவ்வொரு வகைக்கும் ஒரு சேவைக் கட்டணத்தை நிர்ணயித்து உள்ளோம். அவையாவன:
வரன் பேசி முடிக்க தனிப்பட்ட திட்டங்கள்: (விருப்ப சேவை)
அடிப்படை வகை : Rs. 5000/-
நடுத்தர வகை : Rs. 10000/-
உயர் வகை : Rs. 15000/-
ராயல் வகை : Rs. 20000/-
இந்த வகைகள் குறித்த முழு விளக்கங்களை எங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
வரன் பேசி முடிக்கும் திட்டங்களில் சேர்பவர்களுக்கு, பொருத்தமான வரனைப் பேசி முடிக்கும் வரை நாங்கள் உறுதுணையாக இருந்து மேற்கொள்ளக் கூடிய பணிகளுக்கான போக்குவரத்து செலவு, தொடர்பு கட்டணம், பணியாளர்கள் சம்பளம் என அவசியமான செலவுகளுக்கான நியாயமானத் தொகையை மட்டுமே, குறைவான சேவைக் கட்டணமாகப் பெறுகிறோம் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
We write rarely, but only the best content.